கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியத்தைக் குறிப்பிடவும். அ) பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது. ஆ) கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள செரிக்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும். இ) கணைய நீர் லிபிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது. ஈ) என்டிரோகைனேஸ் இரைப்பைநீர் சுரப்பைத் தூண்டுகிறது.
Answers
Answered by
0
என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பைத் தூண்டுகிறது
உணவு செரித்தலில் நொதிகளின் பங்கு
- இரைப்பை சுரப்பிகள் இரைப்பையின் உட்சுவரில் உள்ளது.
- இரைப்பை நொதிகளை இரப்பையின் உட்சுவரில் உள்ள முதன்மை செல்கள் அல்லது பெப்ட்டிக் செல்கள் அல்லது சைமோஜன் செல்கள் சுரக்கின்றன.
- இரைப்பையில் உள்ள செரிக்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவே கைம் அல்லது இரைப்பைப்பாகு ஆகும்.
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீரில் எந்தவித செரிமான நொதிகளும் இல்லை.
- எனினும் பித்தநீர் ஆனது உணவில் உள்ள கொழுப்பைப் பால்மமாக மாற்றுகிறது.
- கணைய நீர் லிபிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.
- சிறுகுடல் கோழைப்படலத்தில் இருந்து சுரக்கப்படும் என்டிரோகைனேஸ் என்ற நொதியானது செயல்படாத டிரிப்ஸினோஜனை செயல்படும் டிரிப்ஸினாக மாற்றுகிறது.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Business Studies,
4 months ago
Math,
8 months ago
Social Sciences,
8 months ago
Social Sciences,
11 months ago
Math,
11 months ago