கைம் (இரைப்பைப்பாகு) என்பது அ) கொழுப்பைத் கொழுப்புத் துகள்களாக மாற்றும் செயல். ஆ) கிளிசராலில் உள்ள / மைசெல் பொருட்களை கொழுப்புத்துகள்களாக மாற்றும் செயல். இ) இரைப்பைநீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல். ஈ) நடுக்குடல் பகுதியில் முழுமையாகச் செரித்த உணவு நீர்மத்தை உருவாக்குதல்.
Answers
Answered by
1
இரைப்பை நீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல்
இரைப்பையில் உணவு செரித்தல்
- இரைப்பை நொதிகளை இரப்பையின் உட்சுவரில் உள்ள முதன்மை செல்கள் அல்லது பெப்ட்டிக் செல்கள் அல்லது சைமோஜன் செல்கள் சுரக்கின்றன.
- உணவு ஆனது வாயினுள் இருக்கும் போதே இரைப்பை நீர் சுரப்பு துவங்குகிறது.
- இரைப்பை நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பல முன்னொதிகள் காணப்படுகின்றன.
- ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆனது செயல்படாத முன்னொதியான பெப்ஸினோஜனை செயல்படும் பெப்ஸினாக மாற்றுகிறது.
- இரைப்பையில் 4 முதல் 5 மணி நேரம் தங்கியுள்ள உணவு ஆனது தொடர் அலை இயக்கத்தின் காரணமாக இரைப்பை நீருடன் கலந்து கடையப்படுகிறது.
- இதனால் உணவு இரைப்பைப் பாகு என்ற கூழ்ம நிலையினை அடைகிறது.
- கைம் (இரைப்பைப்பாகு) என்பது இரைப்பை நீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல் ஆகும்.
Similar questions