கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது? அ) பெப்சின்-இரைப்பை ஆ) ரென்னின்-கல்லீரல் இ) டிரிப்ஸின்-சிறுகுடல் ஈ) டயலின்-வாய்குழி
Answers
Answered by
0
ரென்னின் - கல்லீரல்
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரில் நொதிகள் கிடையாது.
டயலின்-வாய்குழி
- வாய்குழியில் சுரக்கப்படும் உமிழ்நீரில் நீர், Na+. K+. Cl-, HCO3- முதலிய மின்பகு பொருட்கள், டயலின் என்ற உமிழ்நீர் அமைலேஸ், லைசோசைம் என்ற பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் மற்றும் கோழை என்ற உயவுப் பொருள் முதலியன உள்ளது.
பெப்சின், ரென்னின் - இரைப்பை
- இரைப்பை நீரில் உள்ள பெப்சின் என்ற நொதி ஆனது உணவிலுள்ள புரதத்தைப் புரோடியோஸ்களாகவும், பெப்டோன்களாவும் மாற்றுகிறது.
- இளம் குழந்தைகளின் இரைப்பை நீரில் ரென்னின் என்ற புரத நொதி உள்ளது.
டிரிப்ஸின்-சிறுகுடல்
- சிறுகுடல் கோழைப்படலத்தில் இருந்து சுரக்கப்படும் என்டிரோகைனேஸ் என்ற நொதியானது செயல்படாத டிரிப்ஸினோஜனை செயல்படும் டிரிப்ஸினாக மாற்றுகிறது.
Similar questions