கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரி செய்துகொள்கிறது?
Answers
Answered by
1
கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் சரி செய்து கொள்ளும் விதம்
- ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் உள்ள இடத்திற்கு செல்லும் போது, அங்கு ஆக்சிஜன் ஈமோகுளோபினோடு குறைவாக இணைவதால் வளிமண்டல அழுத்தமும், ஆக்சிஜன் பகுதி அழுத்தம் குறைவாக இருக்கிறது.
- இதனால் அவருக்கு தலைவலி, குறை சுவாசம், குமட்டல் மற்றும் தலை சுற்றல் போன்ற உடனடி மலைநோய்க்கான அறிகுறிகள் தோன்றும்.
- ஆனால் அதே இடத்தில் அவர் நீண்ட காலம் வாழும்போது, அதற்கு ஏற்ற சுவாசமும், இரத்தச் சிவப்பணு உருவாக்கமும் ஏற்பட்டு சரிசெய்யப்படுகிறது.
- இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளவே சிறுநீரகங்களிலிருந்து அதிகளவு எரித்தோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
- அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜையை எரித்தோபாய்டின் ஹார்மோன் தூண்டுகிறது.
Similar questions