எந்தவொரு நிலையிலும் ஆக்சிஜன் கடத்தலில் சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதை விளக்குக.
Answers
Answered by
0
ஆக்சிஜன் கடத்தலில் ஏற்படும் சிக்கல்கள்
கடல் மட்டத்திற்கு மேலே
- ஒருவர் கடல் மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் உள்ள இடத்திற்கு செல்லும் போது, அங்கு ஆக்சிஜன் ஈமோகுளோபினோடு குறைவாக இணைவதால் வளிமண்டல அழுத்தமும், ஆக்சிஜன் பகுதி அழுத்தம் குறைவாக இருக்கிறது.
- இதனால் உடனடி மலைநோய்க்கான அறிகுறிகள் தோன்றும்.
- இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளவே சிறுநீரகங்களிலிருந்து அதிகளவு எரித்தோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இது அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜையை தூண்டுகிறது.
கடல் மட்டத்திற்கு கீழே
- ஒருவர் கடலின் ஆழத்திற்கு செல்லும்போது நீரின் அழுத்தம் அதிகரிப்பதால் நுரையீரலின் கொள்ளளவு குறைகிறது.
- இதனால் இரத்த ஓட்டத்தில் அதிக ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் கலக்கிறது.
- இதனால் நைட்ரஜன் நார்கோஸிஸ் நிலை ஏற்படுகிறது.
- கடலின் ஆழத்திலிருந்து உடனடியாக மேலெழும்பி மேற்பரப்பிற்கு வரும்போது, அழுத்த மீட்சி நோய் ஏற்படுகிறது.
- இது தசை மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வாதத்தினை ஏற்படுத்துகிறது.
- கடலுக்கு மேலே மற்றும் உள்ளேயென எந்தவொரு நிலையிலும் ஆக்சிஜன் கடத்தலில் சிக்கல்கள் ஏற்படுகிறது.
Similar questions