நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம் அ) இரத்த வெள்ளையணுக்கள் இல்லாததால் ஆ) இரத்த வெள்ளையணுக்கள் இருப்பதால் இ) ஈமோகுளோபின் இல்லாததால் ஈ) இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்
Answers
Answered by
0
ஈமோகுளோபின் இல்லாததால்
நிணநீர்
- நிணநீர் மண்டலம் ஆனது ஒரு சிக்கலான மெல்லிய சுவரினை உடைய குழல்களாலான வலைப் பின்னல் அமைப்பு, வடிகட்டும் உறுப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் வெவ்வேறு நிணநீர் உறுப்புகளில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் தன்மையினை உடைய செல்கள் முதலியனவற்றினை உள்ளடக்கியது ஆகும்.
- இரத்த நுண் நாளங்களிலிருந்து திசுக்களுக்குள் கசிக்கின்ற திரவங்களில் 10% திரவத்தினை நிணநீர் நாளங்கள் இரத்தக் குழாய்களுக்குக் கொண்டு செல்கின்றன.
- நிணநீர் நாளங்களில் காணப்படும் திரவம் நிணநீர் என அழைக்கப்படுகிறது.
- நிணநீரின் முக்கிய பணி செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது ஆகும்.
- நிணநீரில் ஈமோகுளோபின் காணப்படுவது கிடையாது.
- இதன் காரணமாகவே நிணநீர் நிறமற்றதாக காணப்படுகிறது.
Similar questions
Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
9 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago