சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் அ) நீர்ம அழுத்தத்தைவிட அதிகம் ஆ) திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும் இ) திரவங்களின் நிகர உறிஞ்சுதல் அளவில் முடியும் ஈ) எவ்வித மாற்றமும் நிகழவில்லை.
Answers
Answered by
0
நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்
சிரைகள்
- சிரைகள் என்பது மெல்லிய சுவரால் ஆன, அதிக உள்ளீடற்ற உட்பகுதிகளை உடைய இரத்த நாளங்கள் ஆகும்.
- நுரையீரல் சிரை மட்டும் ஆக்சிஜன் உள்ள இரத்தத்தினை சுமந்து செல்கிறது.
- மற்ற சிரைகள் உடலின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்சிஜன் அற்ற இரத்தத்தினை இதயத்திற்கு எடுத்து வருகின்றன.
- சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் ஆனது நீர்ம அழுத்தத்தைவிட அதிகமானது ஆகும்.
- தமனிகளைக் காட்டிலும் சிரைகளின் இடையடுக்கு மெல்லியது ஆகும்.
- சிரைகளினுள் உள்ள அரைச் சந்திர வால்வுகள் இரத்த ஓட்டத்தினை ஒரே திசையில் செலுத்த, இரத்தம் பின்னோக்கிப் பாய்வதை தடுக்க உதவுகின்றது.
- சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவு ஆகும்.
- இதனால் இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விட சிரைகளே சிறந்தவை ஆகும்.
Similar questions