தமனிகள் மற்றும் சிரைகளை வேறுபடுத்து.
Answers
Answered by
1
தமனிகள் மற்றும் சிரைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
தமனிகள்
- தமனிகள் உடலின் ஆழ் பகுதியில் அமைந்து உள்ளன.
- தமனிகளில் இரத்த ஓட்டம் அதிக அழுத்தத்துடன் இருக்கும்.
- வலிமையான, தடித்த, மீளும் தன்மையினை தமனிகளின் சுவர்கள் பெற்று உள்ளன.
- தமனிகள் இரத்தத்தினை வழங்கும் குழாய்கள் ஆகும்.
- நுரையீரல் தமனி ஆக்சிஜனற்ற இரத்தத்தினை எடுத்துச் செல்லும்.
- தமனிகளில் உள்ளீடு வால்வுகள் கிடையாது.
சிரைகள்
- சிரைகள் உடலின் மேல் பகுதியில் அமைந்து உள்ளன.
- சிரைகளில் இரத்த ஓட்டம் குறைந்த அழுத்தத்துடன் இருக்கும்.
- வலிமை குறைந்த, மிருதுவான, மீளும் தன்மையற்றதாக சிரைகளின் சுவர்கள் உள்ளன.
- சிரைகள் இரத்தத்தினை பெறும் குழாய்கள் ஆகும்.
- நுரையீரல் சிரை ஆக்சிஜனுள்ள இரத்தத்தினை எடுத்துச் செல்லும்.
- உள்ளீடு வால்வுகள் சிரைகளில் காணப்படுகின்றன.
Similar questions