காற்று எவ்வாறு மாசுபடுகிறது
Answers
காற்று மாசுபாடு:
வளி மண்டலம்
நம் பூமியை சூழ்ந்துள்ள வளி மண்டலம், பல வாயுக்கலவை உடையதாகும், இதில் 79% நைட்ரஜனும் 20%, பிராணவாயுவும், 3% கரியமிலவாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன.
காற்று மாசுபாடு:
வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எந்தவித பாதிப்பும் அடையாது. தொழில் மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது, இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன,
இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசுக்கேடு ஒரு நிலையான பிரச்சனையாக உள்ளது. மனித உடல்நலம் உணவு, உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன,
நாம் சுவாசிக்கும் காற்று, தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் அசுத்தப்படுத்தப்படுகின்றது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனகளிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, தொழிற்சாலைகளிலிருந்தும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத்துகள்கள், இரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் முதலியவை காற்றை மாசுபடுத்துகின்றன.
காற்று மாசுபாடுகளினால் ஏற்படும் விளைவுகள்
கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை காற்று மாசுபாடு உண்டாக்குகிறது, தொழிற்சாலைகளும், வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன.
அமில மழை:
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ஏற்படுகிற அமிலமழை, மண்ணின் அமிலத் தன்மையை அதிகப்படுத்துவது மட்டும் அல்லாமல் தாவரங்கள் இலைகளை உதிர்த்தல், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுதல் முதலிய பாதிப்புக்களும் காரணமாகிறது.
ஓசோன் படலம்:
வாயுமண்டலத்தின் ஸ்ரடோஸ்பியரிலுள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக்கதிர்களை தடைசெய்கிறது. அதிகவேக விமானங்கள் (சூப்பர் சானிக்) வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் க்ளோரோப்ஃபளோரோ கார்பன்களும் ஓசோன் படலத்தை சிதைக்கிறது. இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.
வாகனங்கள் - காற்று மாசுகேட்டின் முக்கிய காரணிகள்:
மனிதனின் கண்டுபிடிப்பான வாகனங்கள் நம்மிடம் உள்ள எண்ணெய் சேமிப்பை குறைத்து வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை (கார்பன் மோனா ஆக்ஸைடு) (நைட்ரஜன்) ஆக்ஸைட்டு மற்றும் பிற வாயுகள் காற்றை மாசுப்படுத்திகிறது. இவை, சூரிய கதிர்களுடன் இணைந்து ஒளிவேதி நச்சுப்புகை படலத்தை ஏற்படுத்துகிறது, இது நகரங்களில் பெரிதும் பாதிக்கின்றன.
தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்களோ வளிமண்டலத்தில் அமிலத்தன்மையை ஏற்படுத்துக்கின்றது. இது அமில மழையாக உற்பத்தியாகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுடைகின்றது.
ஒலிச் சீர்கேடு:
ஒலிச்சீர்கேடு நகரங்களில் பாதிப்புக்களை அதிகபடுத்துகிறது. வாகனங்களின் சத்தம், ஒலிப்பெருக்கி ஏற்படுத்தும் இரைச்சல், பொருட்களை விற்போர் கூச்சல், இயந்திரம் ஏற்படுத்தும் உராய்வு சத்தம் போன்றவை மனகவலை, மன அழுத்தம், தலைவலி மற்றும் காது கோளான்மையை ஏற்படுத்துகிறது.
மரங்கள் / தூய காற்றின் தோழன்
மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடுகளை ஆக்சிஜனாக மாற்றுகிறது. நகர வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது, இதனால் காற்று மாசு ஏற்படுத்துகிறது, இதில் இரைச்சலும் அடங்கும். மரங்கள் இரைச்சலை குறைக்கின்றன.