கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு அ) உணர்வு நரம்பு - உட்செலுத்துதல் ஆ) இயக்க நரம்பு - உட்செலுத்துதல் இ) உணர்வு நரம்பு - வயிற்றுப்புறம் ஈ) இயக்கு நரம்பு - முதுகுப்புறம்
Answers
Answered by
0
உணர்வு நரம்பு - உட்செலுத்துதல்
நரம்பு மண்டலம்
- நரம்பு மண்டலம் ஆனது நியூரான்கள் என்ற அதி சிறப்படைந்த செல்களால் உருவானது ஆகும்.
- நியூரான்கள் பல்வேறு தூண்டல்களை பெற்று அதன் தன்மைகளைக் கண்டறிந்து செயல்படுத்தி அவற்றை கடத்துகின்றன.
- எளிய வகை நரம்பு மண்டலம் ஆனது கீழ்நிலை முதுதுநாண் அற்றவைகளில் நரம்பு வலையாக அமைந்து உள்ளது.
- நன்கு வளர்ச்சி அடைந்த நரம்பு மண்டலம் ஆனது உயர்நிலை விலங்குகளில் உணர்ச்சி அறிதல் பணிகள், இயக்கு பணிகள் மற்றும் தானியங்கு பணிகள் என மூன்று அடிப்படை பணிகளை செய்கின்றது.
உணர்ச்சி நரம்பு
- இது புற மற்றும் அகச் சூழலிலிருந்து வருகின்ற உணர்ச்சிகளை உட்செலுத்தும் உணர்ச்சியறிதல் பணிகளை செய்கிறது.
இயக்கு நரம்பு
- இது மூளையிலிருந்து வரும் கட்டளைகளைப் பெற்று எலும்பு மற்றும் தசை மண்டலத்திற்கு அனுப்பும் இயக்கு பணிகளை செய்கிறது.
Similar questions