ஆக்ஸான் படலத்திற்கிடையேயான மின்னழுத்தம் ஓய்வு நிலை மின்னழுத்தத்தைவிட அதிக எதிர் மின்தன்மையுடையதாகக் காணப்பட்டால் நியூரான் எந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும்? அ) மின்முனைப்பியக்க நீக்கம் ஆ) உச்ச மின்முனைப்பியக்கம் இ) மின்முனைப்பியக்க மீட்சி ஈ) குறை மின்முனைப்பியக்கம்
Answers
Answered by
0
உச்ச மின்முனைப்பியக்கம்
- இயல்பான அளவான -70mV என்ற அளவினை கடந்து -90mV என்ற அளவிற்கு மின்னழுத்தம் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மையுடையதாக மாறுகிறது.
- இதற்கு உச்ச மின்முனைப்பியக்கம் என்று பெயர்.
- உச்ச மின்முனைப்பியக்க நிலையில் மிக மெத்தனமாக, பொட்டாசியம் அயனிக் கால்வாய்கள் மூடப்படுவதால் இயல்பான முனைப்பியக்கத்தினை அடைந்த பிறகும் பொட்டாசியம் அயனிகள் அதிகம் உள்ளேறுகின்றன.
- எனவே, பொட்டாசியம் மின்னூட்டக் கால்வாய்கள், மந்த அல்லது சோம்பல் கால்வாய்கள் என அழைக்கப்படுகின்றன.
- பொட்டாசியம் அயனிக் கால்வாய் முழுமையாக மூடியபிறகு, மென்படல மின்னழுத்தம் இயல்பான ஓய்வுநிலைக்குத் திரும்புகிறது.
- இதனால் சோடியம் அயனி மின்னூட்டக் கால்வாய் மூடியே காணப்படும்.
- ஆக்ஸான் படலத்திற்கிடையேயான மின்னழுத்தம் ஓய்வு நிலை மின்னழுத்தத்தைவிட அதிக எதிர் மின்தன்மையுடையதாகக் காணப்பட்டால் நியூரான் உச்ச மின்முனைப்பியக்க நிலையில் இருப்பதாகக் கருதப்படும்.
Similar questions