ஹார்மோன்களின் வேதித்தன்மையினை விளக்குக.
Answers
Answered by
0
ஹார்மோன்களின் வேதித்தன்மை
- ஹார்மோன்களின் வேதித்தன்மை மூன்று வகையாக உள்ளது.
- அவை முறையே அமைன்கள், புரதம் / பெப்டைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகும்.
அமைன்கள்
- நீரில் கரையும் தன்மை உடையவை, சிறியவை, டைரோசின் அல்லது டிரிப்டோஃபேனிலிருந்து உருவானவை முதலியன அமைன்களின் வேதிப் பண்புகள் ஆகும்.
- (எ.கா) அட்ரினலின், நார் அட்ரினலின், மெலடோனின் மற்றும் தைராய்டு ஹார்மோன்.
புரதம் / பெப்டைடுகள்
- நீரில் கரையும் தன்மை உடையவையாக புரதம் / பெப்டைடுகள் உள்ளன.
- (எ.கா) இன்சுலின், குளுக்ககான் மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்கள்.
ஸ்டீராய்டுகள்
- கொலஸ்டிராலில் இருந்து உருவானவை, பெரும்பாலும் கொழுப்பில் கரைவன முதலியன ஸ்டீராய்டுகளின் வேதிப் பண்புகள் ஆகும்.
- (எ.கா) கார்டிசோல், டெஸ்டோஸ்டீரோன், ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் மற்றும் ஆல்டோஸ்டீரோன்.
Answered by
1
Answer:
Oestrogens,prostesterone
Similar questions