கணையச் சுரப்பியை உடலிலிருந்து நீக்கினால் ஏற்படும் விளைவுகளை நிறுவுக.
Answers
Answered by
1
கணையத்தை நீக்குவது உடலின் திறனைக் குறைக்கும் ... சுரப்பிகள் உடலுக்குத் தேவையான வேதிப்பொருட்களை சுரக்கும் உறுப்புகள் ... சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அவை புற்றுநோயாக உருவாகலாம்.
Answered by
0
கணையச் சுரப்பியை உடலிலிருந்து நீக்கினால் ஏற்படும் விளைவுகள்
கணையம்
- கணையம் ஒரு கூட்டுச் சுரப்பி ஆகும்.
- கணையம் ஆனது நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்புப் பணிகளை செய்கின்றன.
- இரைப்பையின் கீழே அமைந்துள்ள இலை வடிவச் சுரப்பியாக கணையம் உள்ளது.
- கணையத்தில் அசினித் திசு மற்றும் லாங்கர்ஹானின் திட்டுகள் என இரு விதமான திசுக்கள் அமைந்து உள்ளன.
- அசினித் திசு ஆனது உணவினை செரிப்பதற்கான நொதிகளையும், லாங்கர்ஹானின் திட்டுகளில் உள்ள பீட்டாச் செல்கள் இன்சுலினையும், ஆல்பாச் செல்கள் குளுக்ககானையும், டெல்டா செல்கள் சொமட்டோஸ்டேடின் என்ற ஹார்மோன்களையும் சுரக்கின்றன.
- கணையம் வளர்ச்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
- எனவே கணையத்தினை உடலில் இருந்து நீக்கினால் வளர்சிதை மாற்றம் ஆனது பாதிக்கப்படும்.
Attachments:
Similar questions