மண்புழு உரத்தின் பயன்களை எழுதுக.
Answers
Answer:
if my answer was helpful with your work and knowledge , please mark me as a brainliest. PLEASE, PLEASE, PLEASE, PLEASE, PLEASE
Explanation:
மண்புழு உரம் விவசாயிகளுக்கு பயன் தரும் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.
உலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை.
மண்புழு உரம் (vermicompost) திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்.
உலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. பெரும்பாலும் உரம் தயாரிக்க சிவப்பு ஊர்ந்தி எனப்படும்(எயசெனியா பெடிடா (Eisenia foetida), எயசெனியா ஆண்ட்ரி (Eisenia andrei) மற்றும் லும்ப்ரிகஸ் லுபெல்லஸ் (Lumbricus rubellus) ) மண்புழு இனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
மண்புழு உரத்தின் பயன்கள்
- மண்புழு உரம் ஆனது அதிக அளவில் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொண்டு உள்ளது.
- மண்புழு உரம் ஆனது மண்ணின் இயல்புத் தன்மை, காற்றோட்டம், நீரைத் தேக்கி வைக்கும் பண்பு முதலியனவற்றினை மேம்படுத்தி மண் அரிப்பினைத் தடுக்கின்றது.
- மண்புழு உரம் ஆனது அதிக ஊட்டச்சத்து உடைய சூழல் நட்பு முறை சீர்த்திருத்தத்தினை மண்ணுக்கு அளிக்கின்ற பொருளாக உள்ளது.
- மேலும் இது மாடித் தோட்டத்தினை அமைக்கவும் பயன்படுகிறது.
- மண்புழு உரம் ஆனது விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியை உறுதி செய்கிறது.
- மண்புழு உரத்தினை சந்தைப்படுத்துதல் தற்போது வளர்ந்து வருகின்ற வளமான தொழில் ஆகும்.
- மண்புழு உரத்தினை கிராமப் புறங்களில் சில்லறை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம்.