India Languages, asked by arunpushpa8, 10 months ago

பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்​

Answers

Answered by Anonymous
9

Answer:

ஹிப்பாலஸ்

Explanation:

பருவக்காற்றுக்கும் துறைமுகத்துக்குமான அடிப்படை தொடர்பு பாய்மர கப்பல் பயணமே.

பருவகாற்றை பயன்படுத்தி பிற நாட்டவர்கள் கடல் பயணம் மேற்கொள்ளும் முன்பே. தமிழர்கள் பருவகாற்றை பயண்படுத்தி பயணம் செய் தார்கள் என்பதற்கு குறிப்புகள் உண்டு.

"நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக

களி இயல் யானைக் கரிகால் வளவ"

என்று ஒரு புறநானூறு பாடல் குறிப்பிடுகிறது.

கரிகாலன் வாழ்ந்த காலம் எது? அவனின் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எது? கரிகாலனின் முன்னோர்களே காற்றின் விசையில் ஓடும் நாவாய்களை கொண்டு இருந்தார்கள் என்றால்.

ஹிப்பாலஸ் என்னும் கிரேக்கரின் வருகைக்கு முன்னரே. முசுறி துறைமுகத்துக்கும்,பருவக்காற்றுக்கும் தொடர்பு இருந்தது என்றே கொள்ளலாம்.

இல்லாதா ஒரு துறைமுகத்துக்கு பருவக்கற்றை கொண்டு ஹிப்பாலஸ் பயணம் செய்திருக்க முடியுமா என்ன!?

Similar questions