எல்லோரா மற்றும் எலிஃபண்டாவின் நினைவுச் சின்னங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
எல்லோரா மற்றும் எலிஃபண்டாவின் நினைவுச் சின்னங்கள்
எல்லோரா
- ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலே எல்லோராவில் நம்மை கவரும் அமைப்பு ஆகும்.
- எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் ஆட்சிக் காலத்தில் ஒரே பாறையைக் குடைந்து கைலாசநாதர் கோயில் உருவாக்கப்பட்டது.
- கைலாசநாதர் கோயில் உள்ள சிற்பங்களின் சிறந்த சான்றாக தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன், விஷ்ணுவும், லட்சுமியும் இசையில் லயித்திருப்பது போன்றவை உள்ளன.
எலிஃபண்டா
- எலிஃபண்டா கோயிலில் உள்ள நடராஜர், சதாசிவம், அர்த்த நாரீஸ்வரர், மகேஷமூர்த்தி ஆகியோரின் சிலைகள் அழகிலும், கலை நுட்பத்திலும் எல்லோரா சிற்பங்களை விட மேன்மையானதாக உள்ளது.
- இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்று இங்கே உள்ள மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச் சிலை ஆகும்.
Attachments:
Answered by
0
Answer:
Kurippo,paruppo...Xd
Similar questions