வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை?
Answers
Answered by
0
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள்
- பயணிகளின் இளவரசன் என அழைக்கப்பட்ட யுவான் சுவாங் வட இந்தியாவின் நிலை குறித்து தன் பயண நூலான சி-யூ-கியில் எழுதி உள்ளார்.
- இதில் மக்களுக்கு முழு வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
- வேறுபட்ட மதத்தினை சார்ந்தோர் இடையே சமூக நல்லிணக்கம் நிலவியது.
- சமூகத்தில் நான்கு பிரிவினருக்கான தொழில்கள், திருமண முறைகள், பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் பற்றி கூறியுள்ளார்.
- மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
- ஆண், பெண் என இருபாலாரும் பருத்தி, பட்டு ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்தனர்.
- இந்தியாவில் பெரும்பாலும் காய்கறி உணவுகளை உண்ணப்பட்டன.
- இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டது.
- இந்திய நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் போன்றவற்றின் அமைப்பு, அழகு, பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.
Similar questions