இயற்கை போற்றத்தக்கது. ஏன்
Answers
Answer is:-
இயற்கை என்பது இயல்பாகும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது.
Answer:
இயற்கை என்பது மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனால் ஆராயப்பட்டு கொண்டிருக்கும் ஒன்று.ஆதிமனிதன் முதல் இப்பொழுது நாகரிகம் கற்று அதன் வழியில் வாழும் மனிதன் வரை, மனிதனுக்குரிய வாழ்வாதாரமாக இருப்பது இயற்கை. மனிதனுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல இயற்கை. ஓறறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்களுக்கும் உரிதானது, பொதுவானது இயற்கை. மனித இனம் இயற்கையை சுயநல எண்ணத்துடன் அழித்த போதும், இயற்கை ஒருபோதும் மனிதனை கைவிட்டதில்லை. உண்ண உணவு தந்து, உடுத்த உடை தந்து, தங்க இடம் தந்து, வாழ்வாதாரத்திற்கான அனைத்தையும் தருவது இயற்கை. நோய்வாய் பட்டால் அதற்கான மருந்தும் இயற்கையிடமிருந்தே நாம் பெற்றுக் கொள்கிறோம். இயற்கை அனைவருக்கும் பொதுவானது. நம் வாழ்க்கைக்கு அத்யாவசியமாக விளங்கும் இயற்கையை நாம் போற்றிப்பாதுகாப்போம்.
Explanation:
இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின் அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும்.
#SPJ3