முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?
Answers
பதில்:
இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.
முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள்
முடிகொண்ட சோழன்
- முதலாம் இராஜேந்திரன் இலங்கைக்கு சென்று, போரில் வென்று பாண்டியரின் மணி முடிகளையும், இலங்கையின் பிற அரச உடைமைகளையும் கைப்பற்றினார்.
- இதனால் முடிகொண்ட சோழன் என்ற பட்டத்தினை பெற்றார்.
கங்கை கொண்டான்
- வட இந்தியாவில் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
- இதனால் இவர் கங்கை கொண்டான் என்ற பட்டத்தினை பெற்றார்.
கடாரம் கொண்டான்
- குறுநில மன்னர்களின் ஆட்சியின் கீழே இருந்து கெடா (கடாரம்) என்ற பகுதியை முதலாம் இராஜேந்திரச் சோழன் கைப்பற்றினார்.
- இதன் காரணமாக முதலாம் இராஜேந்திரச் சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.
- மேலும் பண்டித சோழன் என்ற பட்டமும் முதலாம் இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.