பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
Answers
Answered by
0
பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள்
- பாண்டியர்கள் அதிகளவு பாசன வளங்களை உருவாக்கி அதற்கு வாசுதேவப் பேரேரி, வீரபாண்டியப் பேரேரி, ஸ்ரீவல்லபப் பேரேரி, பராக்கிரமப் பாண்டியப் பேரேரி என அரசக் குடும்பத்தினரின் பெயர்களை வைத்தனர்.
- மேலும் திருமால் ஏரி, மாறன் ஏரி, கலியன் ஏரி, காடன் ஏரி எனவும் பெயரிட்டனர்.
- பாண்டிய மன்னர் சேந்தன் மாறனின் ஆட்சிக் காலத்தினை சார்ந்த வைகை ஆற்றுப்படுகைக் கல்வெட்டுகளில் அவரால் நிறுவப்பட்ட ஆற்று மதகு குறிப்பிடப்படுகிறது.
- பண்டைய கட்டுமானக் கலைஞர்கள் ஏரிகளின் கரைகளை அமைக்கும் போது கரை மட்டத்தினை சமமாகப் பராமரிக்க நூலினை பயன்படுத்தினர்.
- வறட்சிப் பகுதியான இராமநாதபுரத்தில் பல ஏரிகளை வெட்டினார்கள்.
- திருவண்ணாமலை கோயில் நிலங்கள் பாசன வசதி பெற, தென்பெண்ணை ஆற்றில் வாய்க்கால் அமைத்து தந்தனர்.
Similar questions