India Languages, asked by ayappanayappan73447, 9 months ago

தமிழ் விடு தூது _____என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.​

Answers

Answered by Haripriya910
27

Dear matee..❤

GOOD TO FIND A TAMIL QUESTION

தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது..

நூல் கூறும் பொருள்கள்

 

●தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.

 

●பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.

 

●தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.

 

●தலைவி தன் துன்பம் கூறுதல்.

 

●தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்.

என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது தமிழ்விடுதூது...

Hoping that this answer is helpful...Mark as brainliest if you find soo..❤

Don't forget to follow..✌

Answered by steffis
1

தமிழ் விடு தூது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான "தூது"என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

  • சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது இலக்கியத்தின் இலக்கணம்.
  • தூது அனுப்புவோர் ஓர் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம்.
  • தூது பெறுவோரும் ஓர் ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம்.
  • காதல் காரணமாக ஏற்பட்ட பிரிவுத்துயரம் காரணமாக தூது அனுப்புவது வழக்கம்.
  • தூது அனுப்புவோர், உயர்திணை மாந்தர் அல்லது ஓர் அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியைக் கூறி அனுப்புவது.

தூது பெறுவோரிடம் இருந்து மாலையை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை வாங்கி வருமாறு வேண்டித் தூது அனுப்புவது.

Similar questions