அகமாய் புறமாய் இலக்கியங்கள்- அவைஅமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்- இலக்கியங்களின் பாடுபொருள் களமாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
Answers
Answered by
7
Answer:
தமிழ் இலக்கியங்களின் பாடுபொருள்களாக அடிப்படையில் அமைபவை காதலும் வீரமும் ஆகும். தமிழ் மக்களின் உள்ளம் சார்ந்த அக வாழ்வைக் காதல் என்றும், வீரம், கொடை முதலானவற்றைக் சார்ந்த வாழ்வைப் புறம் என்றும் குறிப்பிட்டு, அவற்றிற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்கள், தமிழ் இலக்கண முன்னோடிகள். அவ்வாறான இலக்கணங்கள் பொருள் இலக்கணங்கள் எனப்படுகின்றன. அகத்தில் களவியல், கற்பியல் என்னும் பகுப்பு உள்ளது. எனவே, இவ்வாறு நுட்பமாய் வாழ்வியல் சார்ந்த முறைகளை இலக்கணமாக வடித்துக் கொடுத்த உயர்வான மொழி தமிழ்மொழி என்பதை இவ்வடிகள் உணர்த்துகின்றன.
Similar questions
Social Sciences,
4 months ago
Hindi,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago