வராகன் (பகோடா) என்றால் என்ன?
Answers
Answered by
0
வராகன் (பகோடா)
- விஜய நகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தங்க நாணயம் பகோடா என அழைக்கப்பட்டது.
- இந்தியாவிற்கு ஐரோப்பிய வணிகர்கள் வந்த கால கட்டத்தில் பகோடா என்ற நாணயங்கள் செல்வாக்கு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது.
- மைசூரில் திப்பு சுல்தானின் ஆட்சியின் போது ஒரு பகோடாவின் மதிப்பு மூன்றரை (3½) ரூபாய்க்குச் சமமானதாக கருதப்பட்டது.
- இங்கிலாந்து மக்களிடையே பகோடா மரத்தை உலுக்குதல் என்ற சொலவடை நிலவி வந்தது.
- இந்த சொலவடை இந்தியாவில் ஒருவரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்ற ஐரோப்பியர்களின் அக்கால மனநிலையை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
- பகோடா வகை நாணயங்கள் தமிழில் வராகன் என அழைக்கப்படுகிறது.
Answered by
0
Answer:
தங்கத்தாலோ அரைத் தங்கத்தாலோ உருவாக்கப்பட்ட பகோடா (Pagoda) என்ற நாணயம் பல்வேறு இந்திய அரசாட்சிகளாலும் பிரித்தானிய, பிரெஞ்சு, டச்சு குடியேற்றவாத வணிக நிறுவனங்களாலும் பதிப்பிக்கப்பட்டன. கதம்பர் வம்சம், கோவாவின் கதம்பர்கள், விஜயநகரப் பேரரசு போன்ற தென்னிந்தியாவின் பல இடைக்கால பேரரசுகள் இந்த நாணயங்களை வெளியிட்டன. [1] வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இரு வகையான பகோடாக்களை வெளியிட்டன. முதலாவதாக சென்னையிலிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்ட நட்சத்திரப் பகோடா (ஸ்டார் பகோடா) என்ற நாணயம் ஏறத்தாழ 8 சில்லிங்குகளுக்கு சமமாக இருந்தது.[2] இரண்டாவது தூத்துக்குடி யிலிருந்து டச்சுக்காரர்கள் வெளியிடப்பட்ட போர்ட்டொ நோவோ பகோடா ஆகும். இதனை ஆற்காடு நவாபும் வெளியிட்டார். இதன் மதிப்பு நட்சத்திர பகோடாவைவிட 25% குறைவாக இருந்தது.
Similar questions