பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர் எனப் பாரதியாரால் முன்மொழியப்பட்டவர் ________.
Answers
Answered by
1
Explanation:
பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர் எனப் பாரதியாரால் முன்மொழியப்பட்டவர்
Answered by
0
பாரதிதாசன்
- பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர் எனப் பாரதியாரால் முன்மொழியப்பட்டவர் பாரதி தாசன் ஆவார்.
- சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் வளர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தல் போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து கவிதைகளை இயற்றியுள்ளார்.
- இவரின் பாடல்களில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், புவியை நடத்து, பொதுவில் நடத்து முதலிய பொது உடைமைக் கருத்துக்களும், மக்களாட்சி தத்துவங்களும் அமைந்து உள்ளன.
- பாரதியாரை போல பாரதிதாசனும் சந்த அமைப்புகளிலும், இசையிலும் சிறந்த விளங்கினார்.
- இவர் கும்மி, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு போன்ற மக்களின் இலக்கிய வடிவங்களிலும் கவிதைகளை இயற்றி உள்ளார்.
- மேலும் ஆசிரியப்பாவையும், ஆசிரிய விருத்தங்களையும் பழைய யாப்பு வடிவில் பாடி உள்ளார்.
- பாரதிதாசன் தன் மொழி, தன் நாடு, தன் மக்கள் எனப் பாடியமையால் இரசூல் கம்சதோவ் என்ற இரஷ்ய கவிஞருடன் ஒப்பிடப்படுகிறார்.
Similar questions