Accountancy, asked by Student6d18, 9 months ago

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்‌ பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக.

Answers

Answered by hameedhabanu24
6

முன்னுரை

பயிர் வகைச் சொற்கள்

கிளைப் பிரிவுகள்

காய்ந்த அடியும் கிளையும்

பூவின் நிலைகள்

கெட்டுப்போன காய்கனி வகை

இளம் பயிர் வகைக்கு வழங்கும் சொற்கள்

முன்னுரை

தமிழ் மொழி வேறு மொழிகளுக்கு இடையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது . சொல்வளம் , இலக்கிய செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேணும் , தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும் .

பயிர் வகைச் சொற்கள் :

தமிழ்ச்சொல் வளத்தைப் பல வழிகளில் காணலாம் . பயிர் வகை சொற்கள் மட்டுமே சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது .

அடிவகை :

தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள் - தாள் , தண்டு , கோல் , தூறு, தட்டு ,கழி , கழை, அடி என பல சொற்களில் தமிழர்கள் வழங்குகின்றார்கள் .

கிளைப் பிரிவுகள் :

கவை , கொம்பு , கிளை , சினை, போத்து , குச்சு , இணுக்கு எனப் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காய்ந்த அடியும் கிளையும் :

சுள்ளி, விறகு ,வெங்கழி , கட்டை

இலை வகை :

இலை , தாள் , தோகை , ஓலை , சண்டு , சருகு

கொழுந்து வகை :

தாவரத்தின் நுனிப்பகுதியை குறிக்கும் சொற்கள்:

துளிர் அல்லது தளிர், முறி அல்லது கொழுந்து ,குருத்து , கொழுந்தாடை. என பல சொற்களை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் .

பூவின் நிலைகள் :

அரும்பு , போது , மலர் , வீ , செம்மல்

பிஞ்சு வகை குறிக்கும் சொற்கள் :

பூம்பிஞ்சு , பிஞ்சு , வடு , மாசு, இவ்வகை, கரும்பு , முட்டுக் குரும்பை , இளநீர் , குழாய், கருக்கல், கச்சல் .

குலை வகை குறிக்கும் சொற்கள் :

கொத்து , குலை , தாறு , கதிர் , அலகு அல்லது குரல் , சீப்பு

கெட்டுப்போன காய்கனி வகை :

சூம்பல் ,சிவியல் , சொத்தை , வெம்பல் , அளியல் ,அழுகல் ,ச சொண்டு என சொற்கள் உள்ளன .கோட்டான் காய் , கூகைக்காய் , தேரைக்காய் , அல்லிக்காய் , ஒல்லிக்காய் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் .

பழத்தோல் வகை குறிக்கும் சொற்கள் :

தொலி , தோல் , தோடு , ஓடு , குடுக்கை , மட்டை , உமி , கொம்மை என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் .

மணி வகை குறிக்கும் சொற்கள் :

கூலம் , பயிறு , கடலை , விதை , காழ் , முத்து , கொட்டை , தேங்காய் , முதிரை முதலியவை வழங்கும் சொற்களாகும் .

இளம் பயிர் வகைக்கு வழங்கும் சொற்கள் :

நாற்று , கன்று , குருத்து , பிள்ளை, குட்டி , மடலி , வடலி , பைங்கூழ் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம் தமிழ் சொல் வளமுடையது என்றும் தமிழ்நாடு பொருள் வளம் உடையது என்றும் தெளிவாக விளங்கும் . ஒரு நாட்டின் சொல் வளத்திற்கு தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறவொழுக்கங்களும் அமைந்திருக்கும் . பொருளைக் கூர்ந்து நோக்கி முன் பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக்கொள்வது சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும் .

Answered by mad210220
4

தமிழின் சொல்வளம்

Explanation:

முன்னுரை  

தமிழ்  மொழி  வேறு  மொழிகளுக்கு  இடையில்  தன்னை  நிலைநிறுத்திக்  கொண்டுள்ளது  .  சொல்வளம்  ,  இலக்கிய  செம்மொழிகளுக்கெல்லாம்  பொதுவேணும்  ,  தமிழ்  மட்டும்  அதில்  தலை  சிறந்ததாகும்  .  

பயிர்  வகைச்  சொற்கள்  :  

தமிழ்ச்சொல்  வளத்தைப்  பல  வழிகளில்  காணலாம்  .  பயிர்  வகை  சொற்கள்  மட்டுமே  சிறப்பாக  எடுத்துக்  காட்டப்படுகிறது  .  

அடிவகை  :  

தாவரத்தின்  அடிப்பகுதியை  குறிப்பதற்கான  சொற்கள்  -  தாள்  ,  தண்டு  ,  கோல்  ,  தூறு,  தட்டு  ,கழி  ,  கழை,  அடி  என  பல  சொற்களில்  தமிழர்கள்  வழங்குகின்றார்கள்  .  

கிளைப்  பிரிவுகள்  :  

கவை  ,  கொம்பு  ,  கிளை  ,  சினை,  போத்து  ,  குச்சு  ,  இணுக்கு  எனப்  பல  சொற்கள்  பயன்படுத்தப்படுகின்றன.  

காய்ந்த  அடியும்  கிளையும்  :  

சுள்ளி,  விறகு  ,வெங்கழி  ,  கட்டை  

இலை  வகை  :  

இலை  ,  தாள்  ,  தோகை  ,  ஓலை  ,  சண்டு  ,  சருகு  

கொழுந்து  வகை  :  

தாவரத்தின்  நுனிப்பகுதியை  குறிக்கும்  சொற்கள்:  

துளிர்  அல்லது  தளிர்,  முறி  அல்லது  கொழுந்து  ,குருத்து  ,  கொழுந்தாடை.  என  பல  சொற்களை  தமிழர்கள்  பயன்படுத்தியுள்ளனர்  .  

பூவின்  நிலைகள்  :  

அரும்பு  ,  போது  ,  மலர்  ,  வீ  ,  செம்மல்  

பிஞ்சு  வகை  குறிக்கும்  சொற்கள்  :  

பூம்பிஞ்சு  ,  பிஞ்சு  ,  வடு  ,  மாசு,  இவ்வகை,  கரும்பு  ,  முட்டுக்  குரும்பை  ,  இளநீர்  ,  குழாய்,  கருக்கல்,  கச்சல்  .  

குலை  வகை  குறிக்கும்  சொற்கள்  :  

கொத்து  ,  குலை  ,  தாறு  ,  கதிர்  ,  அலகு  அல்லது  குரல்  ,  சீப்பு  

கெட்டுப்போன  காய்கனி  வகை  :  

சூம்பல்  ,சிவியல்  ,  சொத்தை  ,  வெம்பல்  ,  அளியல்  ,அழுகல்  ,ச  சொண்டு  என  சொற்கள்  உள்ளன  .கோட்டான்  காய்  ,  கூகைக்காய்  ,  தேரைக்காய்  ,  அல்லிக்காய்  ,  ஒல்லிக்காய்  என்ற  சொற்களைப்  பயன்படுத்துகின்றனர்  .  

பழத்தோல்  வகை  குறிக்கும்  சொற்கள்  :  

தொலி  ,  தோல்  ,  தோடு  ,  ஓடு  ,  குடுக்கை  ,  மட்டை  ,  உமி  ,  கொம்மை  என்ற  சொற்களைப்  பயன்படுத்துகின்றனர்  .  

மணி  வகை  குறிக்கும்  சொற்கள்  :  

கூலம்  ,  பயிறு  ,  கடலை  ,  விதை  ,  காழ்  ,  முத்து  ,  கொட்டை  ,  தேங்காய்  ,  முதிரை  முதலியவை  வழங்கும்  சொற்களாகும்  .  

இளம்  பயிர்  வகைக்கு  வழங்கும்  சொற்கள்  :  

நாற்று  ,  கன்று  ,  குருத்து  ,  பிள்ளை,  குட்டி  ,  மடலி  ,  வடலி  ,  பைங்கூழ்  என்ற  சொற்களைப்  பயன்படுத்துகின்றனர்.  

இதன்  மூலம்  தமிழ்  சொல்  வளமுடையது  என்றும்  தமிழ்நாடு  பொருள்  வளம்  உடையது  என்றும்  தெளிவாக  விளங்கும்  .  ஒரு  நாட்டின்  சொல்  வளத்திற்கு  தக்கபடியே  அந்நாட்டு  மக்களின்  அறவொழுக்கங்களும்  அமைந்திருக்கும்  .  பொருளைக்  கூர்ந்து  நோக்கி  முன்  பாகுபாடு  செய்து  அவற்றிற்கேற்பப்  பருப்பொருட்  சொற்களும்  நுண்பொருட்  சொற்களும்  அமைத்துக்கொள்வது  சிறந்த  மதிநுட்பமும்  பண்பாடும்  உடைய  மக்கட்கே  இயலும்  

Similar questions