சிறந்த பேச்சாளராக வளர நீவிர் கையாள வேண்டிய உத்திகள் இரண்டனைக் கூறுக.
Answers
Answered by
0
சிறந்த பேச்சாளராக வளர கையாள வேண்டிய உத்திகள்
- பேசுகின்ற இடம், பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, பேச வேண்டிய கருத்து ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
- பேச்சை தொடங்கும் முன்பு நம் சிந்தனையில் சரியெனப் பட்டதை நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும்.
- சரியான கேள்விகளையும், பதில்களையும் பேச்சின் போது முன் வைக்க வேண்டும்.
- பொருத்தமான நிகழ்வுகளையும் கதைகளையும் தம் பேச்சில் கூறுதல் சிறப்பாக இருக்கும்.
- பேசும் கருத்துகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு பேச்சின் தொடக்கம் முதல் இறுதி வரை பேச்சின் அமைப்பினை ஒரே சீராகப் பேணுதல் வேண்டும்.
- குறித்த நேரத்தில் பேச்சினை தொடங்கவும், முடிக்கவும் பயிற்சி பெற வேண்டும்.
- பேசும் போது அவையோர் அனைவரின் பக்கமும் நம் பார்வையினை செலுத்த வேண்டும்.
- மேற்கண்ட உத்திகளை பின்பற்றினால் சிறந்த பேச்சாளராக வளரலாம்.
Answered by
0
Explanation:
நாம் பேசும் பேச்சில் நோக்கம் இருக்க வேண்டும்.
அதைத்தான் திருவள்ளுவர்...
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
என்றார். பேசித்தான் ஆக வேண்டும் என்றால் பயனுள்ள பேச்சுத்தான் பேச வேண்டும். பயனற்ற வார்த்தைகள் எதையும் பேசக் கூடாது என்பது அதன் பொருள்.
சொல்வதற்கு ஏதாவது பொருள் இருந்தால் மட்டும்தான் பேச வேண்டும். ஒரு சிறந்த பேச்சாளராகத் திகழ விரும்புபவர்கள், அந்தப் பொருள் குறித்த விவாதத்தைப் பலமுறை மனதுக்குள் நடத்தி, நண்பர்களுடன் விவாதித்து, அதன் பின்னரே பேச முன்வர வேண்டும். பேசுவது இயற்கையாக வந்துவிடும். ஆனால் பேச்சாற்றல் என்பது வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை.
Similar questions