கீழ்க்காணும் வடசொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக. சங்கீதம், கமலம், சர்வகலாசாலை, சிநேகம், மிருதங்கம்.
Answers
Answered by
0
Answer:
இசை, தாமரை, பல்கலைக்கழகம், நட்பு, தண்ணுமை
Mark me as brainliest
Answered by
0
மொழிபெயர்ப்பு
- மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழியில் மாற்றுவது ஆகும்.
- மரபு நிலையினை அறிந்து அந்த மொழி வழக்குக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்க வேண்டும் என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
- மேலும் வடமொழிச் சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் போது வடமொழியில் உள்ள சிறப்பு எழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்திலேயே எழுத வேண்டும் எனவும், வடசொல்லின் வடிவம் சிதைந்தாலும் வடமொழிச் சொல்லாகவே கருத வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
- அந்த வகையில் சங்கீதம், கமலம், சர்வகலாசாலை, சிநேகம், மிருதங்கம் ஆகிய வடமொழி சொல்லிற்கு உரிய தமிழ்ச்சொற்கள் இசை, தாமரை, பல்கலைக்கழகம், நட்பு, தண்ணுமை அல்லது மதங்கம் ஆகும்.
Similar questions
Math,
3 months ago
Math,
3 months ago
Computer Science,
6 months ago
Math,
6 months ago
Business Studies,
10 months ago