சமுதாய முன்னேற்றத்திற்கு இதழ்களின் பங்கினைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
0
சமுதாய முன்னேற்றத்திற்கு இதழ்களின் பங்கு
- இதழ்கள் நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- சமூகம் என்பது மக்கள் ஒன்றாய் கூடி வாழும் அமைப்பு ஆகும்.
- சமூகம் ஆனது மொழி, இன, அரசியல் போன்ற தொடர்புகளினால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
- இதழ்கள் அத்தகைய சமூகத்தின் எண்ணங்கள் மற்றும் எழுச்சிகளை எதிரொளிக்கும் கண்ணாடியாக திகழ்ந்து வருகின்றன.
- அடிமையாக உள்ள நாடுகளின் விடுதலைக்கு இதழ்கள் வித்திடுகின்றன.
- மேலும் விடுதலை அடைந்த நாடுகளின் மக்களாட்சிக் காவலனாக இதழ்கள் திகழ்கின்றன.
- இது மட்டும் அல்லாமல் சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் ஊழல்களை எந்தவித அச்சமின்றி எடுத்துரைத்து மக்கள் இடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதில் இதழ் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Similar questions