பக்க வடிவமைப்பு பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
பக்க வடிவமைப்பு
- செய்தித் தாளில் இடம்பெற வேண்டிய செய்திகள் எந்தெந்த பக்கத்தில் எந்த இடத்தில் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பது பக்க வடிவமைப்பு ஆகும்.
- பொதுவாக செய்தித் தாளின் அனைத்துப் பக்கங்களும் மிகவும் இன்றியமையாதவையாக இருந்தாலும், செய்தித் தாளின் முதற்பக்கம் ஆனது சிறப்பானதாகவும், பொலிவு உடையதாகவும் அமைந்து இருக்கும்.
- முதன்மையான அரசியல் செய்திகள், உள்ளத்தை உருக வைக்கும் நிகழ்வுகள், வண்ணப்படங்கள் முதலியன செய்தித் தாளின் முதற் பக்கத்தில் இடம்பெற்றுப் படிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக அமைந்து இருக்கும்.
- சமநிலைப் பக்க அமைப்பு, மாறுபட்ட பக்க அமைப்பு மற்றும் கலப்பு நிலைப் பக்க அமைப்பு என மூன்று வகையான பக்க அமைப்புகள் உள்ளன.
Answered by
0
Answer:
Centre,left,right, justify
Similar questions