மதுரைத்திட்டம் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
3
மதுரைத்திட்டம்
- 1998 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட மதுரைத்திட்டம் ஆனது இன்றுவரை எந்தவித அரசு, தனியார் உதவியோ அல்லது வாணிக நோக்கமோ இல்லாமல் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும்.
- தமிழ் இலக்கியங்களை மின் நூல்களாகப் பாதுகாத்துப் பகிர்ந்து கொள்வதில் விரும்பம் உள்ள அனைவரும் மதுரைத் திட்டத்தில் பங்கு பெறலாம்.
தமிழ் விக்கிப்பீடியா
- அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விக்கிமீடியா அறக்கட்டளை என்ற வாணிக நோக்கமற்ற அமைப்பு விக்கிப்பீடியாவை நிர்வகிக்கிறது.
- கட்டற்ற பன்மொழிக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியாவின் ஒரு பகுதி தமிழ் விக்கிப்பீடியா ஆகும்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கம் என்பது உலகம் முழுவதும் உருவாகின்ற தமிழின் அறிவுத் தொகுப்பைத் திரட்டி, கட்டணம் இல்லாமலும், காப்புரிமைகள் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமலும் அனைவருக்கும் தமிழ் அறிவுத் தொகுப்பை வழங்குவது ஆகும்.
Answered by
1
1998 ஆம் ஆண்டு , தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்டது .
Similar questions