தாவர இனப்பெருக்கத்தில் நவீன முறைகளின் முக்கியத்துவம் பற்றி விவரி.
Answers
Answered by
0
தாவர இனப்பெருக்கத்தில் நவீன முறைகளின் முக்கியத்துவம்
- திசு வளர்ப்பு முறையில் குறைந்த காலத்திற்குள் விரும்பிய பண்புகள் கொண்ட தாவரங்களை விரைவாக வளர்ச்சியடையச் செய்ய முடியும்.
- எந்த ஒரு பருவத்திலும் புதிய தாவரங்களை உருவாக்க திசு வளர்ப்பை பயன்படுத்தலாம்.
- அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறை ஆகும்.
- ஆக்குத்திசு வளர்ப்பின் மூலமாக நோய்களற்ற தாவரங்களை உருவாக்க முடியும்.
- செல்களை மரபணுசார் ரீதியாக மாற்றமடையச் செய்ய திசு வளர்ப்பு முறை பயன்படுகிறது.
- திசு வளர்ப்பின் மூலம் உயிர்ப்பு திறனற்ற மற்றும் முளைக்கும் திறனற்ற விதைகளை உருவாக்கும் தாவரங்களை பெருக்கமடையச் செய்ய முடியும்.
- நுண் பெருக்கம் என்பது நவீன தாவர பெருக்க முறையில் ஒன்று ஆகும்.
Similar questions