"யாளி" இந்த மிருகம் உண்மையா?
Answers
Explanation:
பழைமையான கோயில் சுதைச்சிற்பங்களில் காணப்படும் இத்தகைய மிருகங்கள், ஒருவேளை டைனோசர்கள் போலவே நிஜத்திலும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படாமல் இல்லை.அத்தகைய சில அமானுஷ்ய வடிவம் கொண்ட மிருகங்களில் ஒன்று யாளி.
இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி...’ என்று அகநானூறு பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் புலவர் நக்கண்ணையார்.
அதாவது, வாள் போன்ற வரிகளை உடலில் உடைய புலியானது தான் அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கம் விழுந்தால் அதை ஒருபோதும் சீண்டாத வெற்றியை உடையது. அத்தகைய புலியே பயந்து நடுங்கும் அளவிற்கு ஆளி அதாவது யாளியானது பாய்ந்து வந்து, உயர்ந்த நெற்றியையையுடைய யானையின் முகத்தில் தாக்கி அதன் வெண்மை நிறமான தந்தத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது பொருள்.