India Languages, asked by lalkrishna24, 7 months ago

பகுதி
சந்தி விகாரம் இடைநிலை சாரியை விகுதி
அமைந்து
பார்த்தான்
தோன்றி
வருகிறார்
செய்க
நடந்தனன்
கொடுத்த​

Answers

Answered by Roshinirao8606
0

Answer:

2.3.1 பகுதி

 

மாடுகள், அரசன், ஓடினான் ஆகிய பகுபதங்களை மாடு+கள், அரசு+அன், ஓடு+இன்+ஆன் எனப் பிரிக்கலாம். இவற்றுள் மாடு, அரசு, ஓடு ஆகியவற்றை அடிச்சொல் எனவும் ‘கள்’, ‘அன்’, ‘இன்’, ‘ஆன்’ ஆகியவற்றை ஒட்டுகள் எனவும் அழைப்போம். ஒரு பகுபதத்தில் ஓர் அடிச்சொல்லும் ஒன்று அல்லது பல ஒட்டுகளும் இருக்கும். ஒரு பகுபதத்தின் அடிப்படை வடிவம் அதன் அடிச்சொல் - Root Word ஆகும். அதனுடன் ஒட்டப்படும் அல்லது இணைக்கப்படும் ஒவ்வொரு கூறும் ஒட்டு  -  suffix  எனப்படும். ஒரு பகுபதத்தின் அடிச்சொல்லே ‘பகுதி’ என்று அழைக்கப்படுகிறது.

 

2.3.2 விகுதி

 

பகுபதத்தின் இறுதியில் வந்து திணை, பால், எண், இடம், வேற்றுமை, வினை, ஏவல், வியங்கோள் போன்ற பல்வேறு இலக்கணப் பொருள்களை உணர்த்தப் பயன்படும் உறுப்பை விகுதி என்பர்.

 

பகுபதம்

பகுதி

விகுதி

விகுதிப் பொருள்

அரசன்

அரசு

அன்

(உயர்திணை) ஆண்பால்

அரசி

அரசு

(உயர்திணை) பெண்பால்

மாடுகள்

மாடு

கள்

பன்மை

போனேன்

போ

ஏன்

தன்மை ஒருமை

பூனையை

பூனை

வேற்றுமை

மரமா

மரம்

வினா

பேசுங்கள்

போ

-ங்கள்

ஏவல் பன்மை

வாழ்க

வாழ்

வியங்கோள்

ஓடுதல்

ஓடு

தல்

தொழிற்பெயர்

வந்த

வா

பெயரெச்சம்

ஓடி

ஓடு

வினையெச்சம்

 

இவ்வாறு விகுதிகள் பலவகைப்படும்.    ஒரு பகுபதத்தில் ஒன்றுக்கு அதிகமான விகுதிகள் இடம்பெறலாம். எடுத்துக்காட்டாக, மாடுகளையா என்னும் சொல்லைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

 

மாடு + கள் + ஐ + ஆ = மாடுகளையா

 

இச்சொல்லில் மாடு என்பது பகுதி. கள், ஐ, ஆ என்பன விகுதிகள்.

Similar questions