நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விளக்குக.
Answers
Answer:
மொழி ஆனது எழுத்து மொழியினை காட்டிலும் உணர்ச்சிக்கு மிக அருகில் அமைந்து உள்ளது.
இதன் காரணமாகவே கவிஞனின் கவிதை மொழி ஆனது இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சு மொழிக்குத் திரும்பிய பிறகு அதிக வெளிப்பாட்டு சக்தி உடையதாக மாறிவிடுகிறது.
சில கவிஞர்கள் தங்களின் கவிதையை வாசகர்களுடன் பேசுவது போல இயற்றி உள்ளனர்.
இதற்கு நேரடி மொழி என்று பெயர்.
எழுதும் திறன் உடைய கையை விட பேசும் திறன் உடைய வாய் ஆனது அதிக உணர்ச்சிகளை வெளிப்பாடுவதாக உள்ளது.
எழுத்து மொழி
ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது.
எழுத்து மொழியினை பொறுத்த வரையில் மனிதனின் கை எழுவதை மட்டுமே செய்கிறது.
எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்கு தானே பேசிக்கொள்வது ஆகும்.
இதன் காரணமாகவே பேச்சு மொழி, எழுத்து மொழியினை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.