காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
Answers
Answered by
12
Explanation:
காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன :
காடு பலவகையான பொருள்களைத் தருகின்றது.
எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழலைத் தரும்.
காய்கனிகளைத் தந்து மற்ற உயிரினங்களை வாழச் செய்கிறது.
காட்டில் வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்டு, தன் பசியைப் போக்கிக் கொள்ளும்.
மரங்கள் வெயிலை மறைத்து அங்கே நிழல் தரும்.
அடர்ந்த காடு வழிச் செல்வோர்க்குத் தடையாக இருக்கும்.
Answered by
2
காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன:
- காடு இயற்கை தந்த கொடை மட்டுமே அன்று. காடு இயற்கை நமக்குத் தந்த விடுதி.
- யானை, சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் காடுகளில் எங்கும் அலைந்து திரியும்.
- பறவைகள் மற்றும் விலங்குகளின் உறைவிடம் காடுகளே!
- காடு பலவகையான பொருள்களை நமக்குக் கொடுத்து உதவுகிறது.
- எல்லாரும் கூடி மகிழ்ந்து இன்பம் பெறுக குளிர்ந்த நிழலைத் தருகிறது.
- காய்கனிகளைக் கொடுத்து எல்லா உயிர்களையும் வாழச் செய்கிறது.
- காட்டில் வசிக்கும் குரங்குகள் போன்ற உயிரினங்கள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்டு, தன் பசியைப் போக்கிக் கொண்டு வாழும்.
- பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்டு வாழும்.
- இதனைக் கண்டு நச்சுத்தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலங்கி நிற்கும்.
- நரிகள் ஊளையிடும்.
- மரங்கள் கதிரவனிடமிருந்து வரும் வெயிலை மறைத்து அந்த இடத்தில் நிழல் தரும்.
- இவ்வாறாக காடுகளின் பயன்களை சுரதா விளக்குகிறார்.
#SPJ3
Similar questions