India Languages, asked by Ugashinamithra, 6 months ago

மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார் ​

Answers

Answered by Anonymous
23

Answer:

தேவநேயப் பாவாணர்

Explanation:

சிறந்த பதிலாக தேர்வு செய்யவும்

Answered by sarahssynergy
0

தேவநேயப் பாவாணர்.

Explanation:

  • "மொழிஞாயிறு" என்று அழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் 1902ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நெல்லை மாவட்டம், சங்கரநயினார் கோயிலில், ஞானமுத்தன் - பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாகப் பிறந்தார்.
  • பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". இளமை பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார்.
  • தேவநேயப் பாவாணர் உலகின் முதன்மொழி ஆராய்சியாளராகவும் மேலும் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார்.
  • மறைமலை அடிகளார் அவர்கள், காட்டிய வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்தில் இருந்து மிக சிறந்த முறையில் நேர்மையுடன் உழைத்தார்.
  • பாவாணரின்  ஈடு இணையற்ற தமிழறிவும் பன்மொழியியல் அறிவையும் கருத்தில் கொண்டு பெருஞ்சித்திரனார் இவரை "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைத்தார்.
  • எனவே, பெருஞ்சித்திரனாரால் "மொழி ஞாயிறு" என்று அழைக்கப்பட்ட பெருமை தேவநேயப் பாவாணரை சேரும்.
Similar questions