India Languages, asked by pappu2608, 6 months ago

அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.​

Answers

Answered by gowsi2
120

Answer:

அமர்+த்+த்+ஆன்

Explanation:

பகுதி+சந்தி+இறந்த கால இடைநிலை+பலர் பால் வினை முற்று விகுதி .

Answered by steffiaspinno
29

அமர்ந்தான்  - அமர் + த்(ந்) +த் +ஆன்

அமர் -  பகுதி  

த்(ந்)   - சந்தி  ' ந்' ஆனது விகாரம்  

த்         -  இறந்தகால இடைநிலை  

ஆன்  -  ஆண்பால் வினைமுற்று விகுதி

பகுபத உறுப்பிலக்கணம்:

  • பதம் என்றால் சொல்.
  • பகுத்தல் - பங்கிடுதல், கூறிடுதல்.
  • பகுபதம் என்றால் கூறிடப்படக் கூடிய சொல் என்று பொருள்.
  • தமிழின் முதற்பெரும் இலக்கணமான தொல்காப்பியத்தில் சொல்லை இப்படி பகுக்கும் அமைப்பு நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதில் வரும் இடைநிலை, விகுதி போன்ற அமைப்புகள் அலசப்பட்டுள்ளன.
  • பகுபதம் என்ற சொல்லை அலசும் முறையை முன்வைத்தவர் பவணந்தி முனிவர் - இவரது நன்னூல் என்ற இலக்கண நூலே இக்கருத்தை நமக்குத் தருகிறது.
  • சொற்களை பகுபதம், பகாப்பதம் என்று இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்
  • பிரித்து அலசக் கூடியவை, பிரிக்க இயலதாவை.
  • ‘கண்’ என்ற சொல்லைப் பிரிக்க இயலாது. எனவே இது பகாப்பதம் ஆகும்.
  • ‘கண்டேன்’ என்ற சொல்லைப் பிரிக்கலாம். இது பகுபதம் ஆகும்.

பகுபதங்களின் உறுப்புகள்:

  • பகுக்கக் கூடியது என்றாலே அதில் உறுப்புகள் இருக்கின்றன என்றுதானே பொருள்.
  • பகுபதத்தில் 6 உறுப்புகள் உள்ளன, அவை:
  • பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்
  • ஒரு சொல்லில் இவை அனைத்தும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் பகுதியும் விகுதியும் பெரும்பான்மை இருக்கும். பகுபதங்கள் பெரும்பான்மையும் வினைமுற்றுகளாக இருக்கும்.

Similar questions