நா.தனராசன் தூய்மை மலரட்டும்
Answers
Answered by
1
தூய்மை மலரட்டும்
வாழ்க்கைப் பயண
வாசலில் நித்தம் வாலிபக் கனாக்கள்
சாதனை செய்ய
சந்தர்ப்பம் கேட்கும் புதுச்
சரித்திர நிலாக்கள்! வியர்வைத் துளியின்
வீரிய விதைகள்
விளையும் தேசமிது
விடியலின் ராகம் விவேக கீதம்- தினம்
கேட்கும் காலமிது!
உழைப்பு மரத்தில்
பொதுமைப் பூக்கள் உலகில் பூக்கட்டும்
களைப்பு நீங்கி
உழுபவர் கனவுகள்
வாழ்வில் பலிக்கட்டும்! -புதுக்
கனவுகள் பலிக்கட்டும்!
சுற்றுச் சூழல்
விழிப்புணர் வுற்று தேசம் ஒளிரட்டும்
சுதந்திரக் காற்று
சுழன்று வீச - எழில் தூய்மை மலரட்டும்!
ஏற்றத்தாழ்வு
பூமியில் நீங்கி
அமைதி நிலவட்டும் ஏழைகள் வாழ்வு
முழுநிலா போல- தினம்
ஒளியும் வீசட்டும்.
Explanation:
பாடலின் கருத்து
- எல்லா இடங்களிலும் தூய்மை நிலைபெற வேண்டும் அதாவது வெறும் அழுக்கு படிந்து இருக்கு அந்த சாதாரண சட்டையில் படிந்த அழுக்கை போக்க மட்டும் கிடையாது
- சட்டத்தில் படிந்த அழுக்குகளையும் போக வேண்டும் மனித வாழ்க்கையில் படித்திருக்கக் கூடிய மனித மனதில் படிந்த அழுக்கு எல்லாம் போகணும் அப்பதான் வந்து அது முழுமையான துணையாக அமையும் புறத் தூய்மை நீரான் அமையும்
- அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் வள்ளுவர் சொல்கிறார் இந்த மாதிரி நீங்க நமக்கான தொழில் என்பது வெறும் சோப்பு போட்டு நம்முடைய ஆடைகளை தூய்மை செய்து கொள்ளும் மட்டும் கிடையாது
கவிஞர் நா.தனராசன் :
- அவர்கள் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் திருத்துறைப்பூண்டி வட்டம் வேப்பஞ்சேரி எப்படி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இவர் அப்பா நாராயணசாமி தேவர் அம்மா வேகமாக விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இருந்தாலும் கூட இவரை நல்லபடியா படிப்பை முடித்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து அதில் தங்க பதக்கம் பெற்றார்.
- சின்ன சிறுவயதிலேயே கவிதை எழுதக்கூடிய ஆர்வம் மிக்கவர் பேராவூரணியில் இருக்கக்கூடிய அரசு கல்லூரியின் முதல்வராகவும் பணி செய்திருக்கிறார்.
- இதை அந்த கிராமத்து மனிதன் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் எழுதி இருக்காரு பல இலக்கிய அமைப்புகள் உடைய பரிசுகளைப் பெற்றிருக்கிறார் அதுல அந்த கிராமத்து மனிதர் நபி என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை தூய்மை மலரே என்னும் கவிதையை..
Similar questions