India Languages, asked by priyamahesh3, 5 months ago

முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா சிறுகதைகள்​

Answers

Answered by veera2002
1

Answer:

காலா காலமாக ஊறிவிட்ட பழமைகளை நாங்கள் இன்னும் துடைத்தெறியாமல் இருக்கிறோம். கணவன் மனைவிக்கு தாலி கட்டுவது (கணவனுக்கு மனைவி இன்றுவரை எதுவும் கட்டவில்லை!), பெண்கள் அடங்கிப் போகவேண்டும் ஆண்கள் அடக்கிஆளவேண்டும் (இது என் நண்பர்களுக்கே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்), தாய் தந்தை சொல்லை எந்த நிலையிலும் மீறக் கூடாது, பாடசாலைக் கல்வி இல்லை என்றால் கதை கோவிந்தா, இன்னும் பல ….. அதில் ஒன்றுதான் பழமொழிகளை அப்படியே பின்பற்றுவது. அந்தப் பழமொழிகளில் ஒன்றுதான் “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?” என்பது. அதாவது எவன் ஒருவன் கொஞ்சம் வித்தியாசமாக அதையாவது சொல்ல வருகிறானோ அவனுக்கு இந்தப் பழமொழி கூறப் பட்டுவிடும். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பழமொழி சொல்லப் பட்டது முடவனுக்கு(முடியாதவனுக்கு) ஆனால் நாங்கள் சொல்லுவதோ கால்கள் இருபவனுக்கு(முடியுமானவனுக்கு).

என் நண்பர் ஒருவர் விடுதி முகாமைத்துவம் படிக்கப் போனார், அவருடைய தாயார் அவரை டிப்ளோமா நிலைக்கு மேல் படிக்க விடவில்லை காரணம் என்னவென்றால் அவருடைய தம்பியின் மகன் தங்கையின் மகன் எல்லோரும் டாக்டர்கள் இதனால் இந்த விடயத்தில் என் நண்பர் முடவனாக்கப்பட்டார். இன்னொருவர் சிறு வியாபாரம் செய்ய முயற்சித்தார் அவருக்கும் இதே பழமொழி. என் நானே கொஞ்சம் சிறிய அளவான மட்டுப்படுத்தப்பட்ட கடன் அட்டை ஒன்றை வைத்து இணைய வியாபாரம் செய்யப்போனேன் எனக்கும் இதே பழமொழி.

நண்பர்களே நாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் மனம்தான் உலகின் பல பூட்டுக்களைத் திறக்கும் சாவி, இதனால்தான் இன்று பல முடவர்களுக்காக பரா ஒலிம்பிக்ஸ் நடை பெறுகிறது. அதை விட பல்கலைக்கழக படிப்பை பாதியில் நிறுத்திய பில் கேட்ஸ்தான் பெரிய பணக்காரராக இருக்கிறார். பொதுவாக நம் பெரியவர்களுக்கு சிறியவர்கள் பெரிய அளவில் வருவது பிடிக்காது, இதனாலே பல முயற்சிகளுக்கு தடா போட்டு விடுவார்கள். ஞாபகம் இருக்கட்டும் பாடசாலைக் காலத்தில் கற்பதற்கு தகுதியில்லாதவர் என கூறப் பட்டு ஆசிரியரால் ஒதுக்கப்பட்ட ஒருவருக்காக அமெரிக்க ஒவ்வொரு வருடமும் ஒரு நிமிட மின்வெட்டைக் கடைப் பிடிக்கிறது அவர் யாருமல்ல “தாமஸ் அல்வா எடிசன்” என்கிற மக்களின் விஞ்ஞானியே!

லார்ரி பேஜ் என்னும் சிறுவனின் உருவாக்கம் தான் இன்று உலகையே புரட்டிப் போடும் Google, பறக்கவேண்டும் என்று கனவு கண்ட இளைஞர்கள் விமானம் ஓட்டினார்கள். பாடசாலை இளைஞர்களால் முடியாது என்று சொன்னபோது இந்துவின் மைந்தர்கள் “Life” இசைத் தொகுப்பை வெளியிட்டார்கள் அவர்கள் போக மீண்டும் அதே மண்ணில் புது “யுகம்” பிறந்தது. மனதளவில் முடவனே முடவன் ஏனையவன் மனிதனே. யாருடைய முட்டுக் கட்டைக்கும் முகம் சாய்க்காதீர்கள் உங்கள் பாதையில் உறுதியாய் இருங்கள். தாய் சொல்லை சரி எனில் தட்டாதே பிழை எனில் தட்டத் தயங்காதே. பொருள் பற்றி வளரும் அக்கினி போல் நாளும் வளர்ந்து வா. எரிய விறகில்லை என்றால் நான் விறகாவேன்.

உண்மையில் முடவனாக இருப்பவன் கூட ஒரு பாரம் தூக்கியில் அமர்ந்து கொண்டால் கொம்புத் தேனுக்கென்ன கோபுரத் தேனுக்கே ஆசைப்படலாம்!!!

Answered by deepalmsableyahoocom
0

Answer:

இரண்டுமே தமிழில் நம்பிக்கை என்று பொருள் கொள்ளும். இதனை எப்படி வேறு படுத்திப் புரிந்து கொள்வது என்று யோசிக்கும் போது, கீழே உள்ள பழமொழி ஞாபகம் வந்தது.

"முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படுவது போல" - இது பழமொழி.

முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாம். ஏன் படக்கூடாது?

ஆசை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தால், அது எளிதில் நிறைவேறாது. ஆனாலும் ஏதாவது வெளி சக்தி மூலம் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பு உண்டு - பலமான காற்று வீசி, அந்த கொம்பு தேன் தானே கீழே விழுந்தால், அது HOPE.

ஆசை நிறைவேறும் வரை போராடி, அதற்காக முழு முயற்சியுடன் உழைத்து, என்னால் இந்த பலனை எட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் வென்று பலன் அடைந்தால், அது BELIEF.

Similar questions