திரவமானி எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது
Answers
Answer:
திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அடர்த்தி திரவங்களில் ஹைட்ரோமீட்டர் ஆழமாக மூழ்கி, உப்பு, பால் மற்றும் அமிலங்கள் போன்ற உயர் அடர்த்தி திரவங்களில் குறைவாக ஆழமாக மூழ்கிறது. திரவமானிகள் பெரும்பாலும் கண்ணாடியாலாவை. நீளமான உருளை வடிவிலான தண்டையும், குடுவை வடிவிலான அடிபாகத்தையும் கொண்டுள்ளது. திரவமாணியை செங்குத்தாக மிதக்க வைக்க, அதன் அடிபாகத்தில் பாதரசம் அல்லது லேட் ஷோட்சினால் நிரப்பப்பட்டுள்ளது.
அடிப்படை தத்துவம்
இக்கருவி, ஆர்க்கிமிடீசு தத்துவம் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
சிறப்பு திரவமானிகள்
லேக்டோமீட்டர்
ஆள்கோஹோலோமீட்டர்
சாக்ரோமீட்டர்
தெர்மோ ஹைட்ரோமீட்டர்
யுரிநோமீட்டர்
ஆசிடோமீட்டர்
செளைனோ மீட்டர்
பார்கோமீட்டர்
பயன்பாடு
இது திரவங்களின் அடர்த்தியை நீரின் அடர்தியோடு ஒப்பிட்டு பார்க்க பயன்படுகிறது.
Explanation:
archemedes concept