சாரணர் என்றால் யாரை குறிக்கும்?
Answers
Answered by
0
Answer:
சாரணர் என்போர் சாரணியத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் ஆவர். இவர்கள் பொதுவாக 10 தொடக்கம் 18 வயதுப் பிரிவினராகவே காணப்படுவர். வயதின் அடிப்படையில் கனிஷ்ட, சிரேஷ்ட எனும் இரு வகையாக இவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். 20 முதல் 40 வரையான சாரணர்களை உள்ளடக்கிய குழு, துருப்பு (Troop) எனவும் அத்துருப்புக்களில் 6 தொடக்கம் 8 வரையான உறுப்பினர்களைக் கொண்ட பிரிவு அணி எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு துருப்பிலும் சாரணத் தலைவர்கள் காணப்படுவர். சாரண செயற்பாடுகள் துருப்பு அல்லது அணி ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
சாரணர்கள் பொதுவாக, சாரணர், கடற்காரணர் வான் சாரணர் என மூன்று வகைப்படுத்தப்படுகின்றனர். சாரணர்களின் இயக்கம் 1907இல் பேடன் பவல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
Similar questions