English, asked by kavitharishab, 5 months ago

பனைமரத்தின் பயன்கள் ஐந்தினை எழுதுக​

Answers

Answered by Harini8075
2

I HOPE THIS WILL HELP YOU ^_^

Attachments:
Answered by loverboy0001
4

Q. பனை மரத்தின் பயன்கள் யாவை?

Answer:-

பனை

  • பொதுவாக பனைமரம் பதனீர், நொங்கு, ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள்களை நமக்கு வழங்கி வருகின்றது.

  • பதனீர் காய்ச்சப்பட்டு இதிலிருந்து கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியன உற்பத்தி செய்யப்படுகிறன.

  • பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது இது பனம்பழம் ஆகிறது.

  • இது ஒரு சிறந்த உணவுப்பொருள் ஆகும்.முன்பு தெருக்களிலும் இவற்றை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

  • நொங்கு எடுத்த பின்னர் மீதமான பனங்காய்கள் இரண்டினால் செய்த தள்ளுவண்டி முன்னர் சிறுவர்களின் விளையாட்டு சாதனமாகவும் இருந்தது!

  • பனை விதைகள் மணலில் நெருக்கமாக ஊன்றப்பட்டு இதிலிருந்து பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

  • இது மிகவும் சத்துள்ள ஒரு உணவுப்பொருள் ஆகும்.

  • பனைமர ஓலைகளில் இருந்து பாய் மற்றும் கைவினைப் பொருள்கள் செய்யப்படுகிறன..

  • காய்ந்த பனையோலைகள் கூரைகள் மேய்வதற்கு பயன்படுகிறது.

  • வயது முதிர்ந்த பனை மரத்தை அறுத்து சட்டங்களாக்கி (இதற்கு பனங்கை என்று பெயர்) வீடுகளில் பரணுக்கு கீழ்ப் பக்கம் சட்டம் அமைத்து மேற்புறம் பலகை அடைத்து முன்னர் உள்ள பழைய வீடுகளில் பயன்படுத்தி வந்தனர்.

  • ஓட்டு வீடுகளில் கீழே பனைமர சட்டங்கள் அமைத்து அதன் மேற்புறம் ஓடுகள் அடுக்கி வீடு கட்டும் வழக்கம் முன்னர் இருந்தது.

  • சட்டம் இட்ட மரக் கட்டில்களில் முன்னர் பனை மர கிளையிலிருந்து பிரித்தெடுத்த பனை நார் வைத்து பின்னல் செய்யயும் வழக்கம் உள்ளது.

  • இதில் இரண்டு வகையான பின்னல்கள் உண்டு.

  • ஒன்று கண் பின்னல் , இன்னொன்று நெருக்கமாக பாய் பின்னல் ஆகும்.

  • இந்த கட்டிலில் படுப்பது உடலுக்கு மிக்க வலிமை தரும்.

  • பல ஆண்டுகளுக்கு முன்னர் திரு.குமரிஅனந்தன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் இதனைதெரிவித்துள்ளார்.
  • வைரம் பாய்ந்த பனைமர சட்டத்தில் செய்யப்பட்ட கட்டிலில் பனை நார் வைத்து பின்னிய கட்டிலில் படுப்பதன் காரணமாகவே இன்றும் உடல் நலத்துடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார்.

  • பயன்பாட்டுக்கு ஆகாத பனை மரங்களை உலர்ந்த பின்னர் செங்கல் சூளைகளில் எரிக்க பயன்படுத்துகின்றனர்

  • நான் சிறுவனாக இருந்தபோது எல்லா வீடுகளிலும் பனை நாரினால் உருவாக்கப்பட்ட வண்ணமயமான பின்னல்களுடன் சிறியதும் பெரியதுமாக நார்பெட்டிகள் நகரத்திலும் புழக்கத்தில் இருந்தன.

  • 1950 களில் வெளியூர் பயணங்களின் போது இந்த பெட்டியில் துணிமணிகள் மற்றும் இதர பொருள்களை வைத்து பயணம் போவார்கள் என்று. நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • ஒரு துணியை விரித்து அதன்மேல் பெரிய இந்த நார்பெட்டியில் பொருள்களை அடுக்கி வைத்து முடிந்து இடுப்பில் அல்லது தலையில் சுமந்து செல்வதை1960 களில் நான் பார்த்திருக்கின்றேன்.

  • 1960 களின் துவக்கத்தில் ரெக்சீன் பயணப்பைகள் புழக்கத்தில் வந்தன.பின்னர் விதவிதமான சூட்கேஸ்கள் வந்தன.

  • 1960 களில் சிவகாசியில் எனது தாய்மாமா அவர்கள் வீட்டில் வண்ணமயமான பனை ஓலையினால் பின்னப்பட்ட அழகிய பயணப்பெட்டி (சூட்கேஸ்) ஒன்று இருந்தது.

  • இவ்வாறு பனைமரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன.

Similar questions