சமணப் பள்ளிகளும் பெண்கல்வியும் குதிப்பு வரைக ?
Answers
Answered by
11
- சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால் தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும், கல்வி மொழியாகவும் மற்றும் சமயம் வாணிகம் போன்ற எல்லாத்துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது (மா. ராச மாணிக்கனார், சங்ககால தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம், வரலாறு இதழ், 1996) என்று சங்ககாலத்தில் தமிழே எல்லாத் துறைகளிலும் பயன்பாட்டில் இருந்தது என்ற மா. இராச மாணிக்கனார் கருத்து தமிழ்ச் சங்ககாலத்தில் பெற்றிருந்த பொதுமொழித் தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. சங்ககாலக் கல்விமுறையிலும் தமிழுக்கு உயர்வர்ன இடம் இருந்துள்ளது. தமிழைக் கற்பிக்க, சமயங்களைக் கற்பிக்க, அறங்களைக் கற்பிக்க இவற்றை வழிநடத்த அமைப்புகள் பல இருந்துள்ளன.
- சங்கம் என்ற அமைப்பே பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. இதுதவிர மன்றம், சான்றோர் அவை, அறம் கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி, அந்தணர் பள்ளி போன்ற பல்வேறு அமைப்புகள் சங்ககாலத்தில் கற்பித்தல் பணியைச் செய்து வந்துள்ளன. இவற்றின் பணிகளை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
Similar questions