India Languages, asked by anubharathi231, 5 months ago

புதுக்கவிதையின் முன்னோடி யார்?​

Answers

Answered by ais39
12

Answer: புதுக்கவிதையின் முன்னோடி பாராதியார்.

Answered by steffiaspinno
4

ந. பிச்சமூர்த்தி

இலக்கணம் இன்றி கருத்துக்களை கவிதைகளாய்  வெளிப்படுத்துவது புதுக்கவிதை எனப்படும்.  பாரதியார் தமிழில் புதுக்கவிதைக்கு வித்திட்டவர் ஆவார்.  ஆனால் புதுக்கவிதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் ந. பிச்சமூர்த்தி ஆவார்.  

புதுக்கவிதையின் வளர்ச்சி 3 காலங்களைக் கொண்டது.

  • மணிக்கொடி காலம்
  • எழுத்து பரம்பரை
  • வானம்பாடி பரம்பரை

ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி காலத்தைச் சேர்ந்தவர்.  இவரது காலம் 1900-1976.  பாரதியின் காலத்திற்கு பிறகு கவிதை மரபில் மாற்றம் விளைவித்தவர் ந. பிச்சமூர்த்தி.  தினமணி, மணிக்கொடி, சுதந்திர சங்கு, சுதேசமித்திரன், கலாமோகினி, கிராம ஊழியன் ஆகிய பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் இவரது கவிதைகள் வெளியிடப்பட்டன.  இவரது முதல் கவிதை காதல் 1934ல் வெளியானது.  வள்ளிக்கண்ணன், புதுக்கவிதையின் இரட்டையர்கள் என்று ந. பிச்சமூர்த்தி மற்றும் கு.ப. இராசகோபாலன் அவரையும் குறிப்பிடுவார்.

Similar questions