Social Sciences, asked by prakash05041982, 5 months ago

...........ஆம் ஆண்டு ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகத் போரிட்டது.​

Answers

Answered by Anonymous
2

Answer:

  • இரண்டாம் சீன-சப்பானியப் போர் (Second Sino-Japanese War, சூலை 7, 1937 – செப்டம்பர் 9, 1945) என்பது சீனக் குடியரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும்.
  • சூலை 1937ல், சப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது.இந்நிலையில் 1937-இல் சியாங்கே ஷேக் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஐக்கிய கூட்டமைப்பை உருவாக்கினார்.
  • இந்த சம்பவம் சப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாக செயல்பட்ட சோவியத் ஒன்றியம், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • இதன் மூலம் சீன - செருமனி ஒத்துழைப்பு (1911 - 1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தை பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்கு பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது.
  • ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Similar questions