உன் பகுதியில் தெருவிளக்கு வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக
Answers
Answer:
அனுபுநர்
கே.பாண்டியன்
1 /2 திருநகர்
வேலூர்
பெறுநர்
ஆணையாளர்
வேலூர் மாநகராட்சி
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் :விளக்கு எரியவில்லை என்று
நகராட்சிக்கு கடிதம்.
என் பெயர் கே.பாண்டியன். நன் வேலுரின் திருநகரில் வசித்து வருகிறேன். எங்கள் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக தெரு விளக்கு இல்லை.
இதனால் பொது மக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் பாதையில் செல்வது மிகவும் கடினமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வருவதை எளிதில் காண முடியவில்லை. எனவே விரைவில் தெரு விளக்கு வசதி வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இடம்: வேலூர்
நாள் : 06 .06 .2011
தங்களின் உண்மையான
கே.பாண்டியன்
உரைமேல் முகாவரி
ஆணையாளர்
வேலூர் மாநகராட்சி
Explanation:
Hope this helps you ✌️
அனுப்புநர்
பெயர்,
3வது தெரு,
மெயின் வீதி,
பள்ளிபாளையம்,
திருப்பூர் மாவட்டம்.
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு,
திருப்பூர்.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
நாங்கள் பள்ளிபாளையம் பகுதியில், 3வது தெருவில் வசித்து வருகிறோம். எங்களது தெருவில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், எங்கள் தெருவில் தெருவிளக்கு அமைக்கபடாமல் இருப்பதால் பல சிரமங்களுக்கு உள்ளாகிறோம். பணி முடித்து இரவு வீட்டிற்கு செல்வதற்கு அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடிவதில்லை. ஆகையால், தயவுகூர்ந்து எங்களது தெருவிற்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
பெயர்