World Languages, asked by anascook, 1 month ago

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது - என்று கடிதம்
எழுதியவர்
பாரதியார்​

Answers

Answered by brainlybrainme
0

Answer:

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது - என்று கடிதம் எழுதியவர் பாரதியார்

Answered by DeenaMathew
0

பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று

மொழிப்பற்று :

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார்.
  • நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
  • தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும்.
  • புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண் டும் என்கிறார்.

சமூகப்பற்று :

  • சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9. பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார்.
  • பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
  • சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும்.
  • அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

#SPJ2

Similar questions