ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி
Answers
ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.
Answer:
ஐ.பி.எம் நிறுவனம் சன் மைக்ரோசிஸ்டெம் நிறுவனத்தை வாங்க பேச்சு நடப்பதாக செய்தியை படித்தவுடன் சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஐ.பி.எம் நிறுவனம்,சன் மைக்ரோசிஸ்டெம் நிறுவனத்தை வாங்க குறைந்தது 6.5 பில்லியன் டாலருக்கு பேசியிருக்கிறதாம்.உலக பொருளாதார மந்தநிலைக்கு சன் மைக்ரோசிஸ்டம் தாக்குபிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தற்போது உலக சர்வர் கணினி சந்தையில் ஐ.பி.எம் நிறுவனம் 33% கொண்டுள்ளது. அடுத்ததாக எச்.பி நிறுவனம் 30% கொண்டுள்ளது. சன்-னை வாங்குவதால் உலக சர்வர் கணினி சந்தையில் ஐ.பி.எம் நிறுவனம் மேலும் பலம்பெரும் என்று நம்புகின்றனர்
Step-by-step explanation:
- தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய நாம் பயன்படுத்தும் கருவிகளின் உருவ அளவு என்பது குறைந்துகொண்டே செல்கிறது. அளவு குறைந்தாலும் அதன் செயல்திறன் என்பது அதிகரிக்கிறது. மக்கள்கூட அதைதான் விரும்புகிறார்கள். எடுத்துக்காட்டாக மொபைலை எடுத்துக்கொண்டால் அது கைக்குள் அடக்கமாக இருக்க வேண்டும், எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதே வேளையில் ஒரு கருவியை எளிதில் சிறியதாக வடிவமைத்து விட முடிவதில்லை. இருந்தாலும் முன்னர் இருந்ததோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகள் அனைத்துமே அளவில் சிறியதாக மாறியிருப்பதை உணர முடியும். இந்நிலையில்தான் IBM நிறுவனம் உலகில் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உலகின் மிகச்சிறிய கணினி
- கணினிகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் அளவு ஒரு அறையை விடவும் பெரியதாக இருந்தது. அதன் பிறகு பிராஸசர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக அதன் அளவு குறைந்ததுடன் மட்டுமின்றி அதன் செயல்திறனும் அதிகரித்தது. ஐபிஎம் நிறுவனம் Think 2018 எனப்படும் தொழில்நுட்ப மாநாட்டை லாஸ் வேகாஸ் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. அந்த மாநாட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றக்கூடும் என தான் நினைக்கும் ஐந்து தொழில்நுட்பங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறது. அந்த ஐந்து தொழில்நுட்பங்களில் ஒன்றாகத்தான் இந்த கணினியை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்த கணினியைக் உருவாக்கியிருக்கிறது ஐபிஎம். இந்த கணினியின் அளவு வெறும் 1 மி.மீ என்பதுதான் இதன் சிறப்பே. இதுவரை உருவாக்கப்பட்டதிலும் தற்பொழுது இருப்பவற்றிலும் இதுதான் உலகின் மிகச் சிறிய கணினி. இவ்வளவு சிறியதாக இருந்தாலும் இதற்குள்ளே பல்லாயிரக்கணக்கான ட்ரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- இந்த கணினி கண்காணிப்பு, பகுப்பாய்வு ஆகியவற்றை செய்யும் திறன் கொண்டது, அதோடு இதிலிருக்கும் தகவல்களை வேறு சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ளவும், மற்ற சாதனங்களோடு தொடர்பு கொள்ளவும் இதில் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மொத்த அமைப்பிற்கும் இயங்கத் தேவையான மின்சாரத்தை அளிப்பதற்கு சோலார் செல் பயன்படுத்தப்பட்டிக்கிறது. இவ்வளவு சிறியதாக இருந்தாலும் இதன் செயல்திறன் என்பது 1990-களில் வெளியான கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இன்டெல் நிறுவனத்தின் x86 என்ற பிராஸசருக்கு இணையாக வேகம் கொண்டிருக்கும். இதன் அளவோடு இப்பொழுது இருக்கும் பிராஸசரோடு ஒப்பிட்டாலும் கூட செயல்திறன் அதிகமாகத்தான் இருக்கும். அதே வேளையில் இதனை உருவாகுவதற்கு 10 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகும் என்கிறது ஐபிஎம்.
- "இது தொடக்கம்தான் இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் ஒரு புள்ளி அளவே இருக்கும் இது போன்ற கணினிகள் மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகள் மற்றும் பொருட்களிலும் இடம் பிடிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் ஐபிஎம் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவரான அரவிந்த் கிருஷ்ணா. இதை எங்கு வேண்டுமானாலும் எளிதாக பொருத்திவிடலாம் என்பதுதான் இதன் முக்கிய சிறப்பாக இருக்கப்போகிறது. இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Michigan Micro Mote என்ற கணினிதான் மிகச்சிறிய கணினியாக இருந்து வந்தது. அது 2 மி.மீ அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மூன்று வருடங்களுக்குள்ளாகவே அந்த சாதனையை முறியடித்திருக்கிறது ஐபிஎம் நிறுவனம்.