பங்களவுகள் என்றால் என்ன
Answers
உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்கு, உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமான தீர்வுகாண வழிவகுக்கிறது, இந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, அவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும்.[4][5] இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்கு முனனால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும், அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும். இந்த அமைப்பானது, தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்று) என்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் மிகுதியாக உள்ள நலிந்த நாடுகளின் பங்கேற்பினைச் செழுமைப்படுத்திச் சம நிலையில் வாதம்புரிந்து பங்கேற்பதற்கான பெரும் முயற்சியாகும். இருந்தாலும், "வேளாண் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணற்ற ஏழ்மையில் வாடும் குடியானவர்கள் கொண்ட நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில், அதிகமாக இறக்குமதி செய்யும் காலகட்டங்களில், ஏழைக்குடியானவர்களுக்குத் 'தனி பாதுகாப்பு கவசம்' அளிப்பது பற்றிய துல்லியமான செயல்பாட்டிற்கு ஒவ்வாமை இருப்பதனால் வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தற்போது, தோகா சுற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது."