நீ படித்து மகிழ்ந்த நூல் பற்றி உன் நண்பனுக்கு கடிதம் எழுதுக
Answers
Answer:
sorry I didn't understand it
Answer:
இடம்,
தேதி.
அன்புள்ள நண்பனுக்கு,
வணக்கம் நலம், நலமறிய ஆவலாய் உள்ளேன். சென்ற வாரம் நான் ஓர் இனிய நூலைப் படித்தேன். அதன் பெயர் திருக்குறள் வினாடி - வினா. நாம் எத்தனையோ குறள்களையும் அதன் பொருளையும் படித்திருக்கின்றோம். ஆனால் மறந்து விடுகிறோம். அவற்றை நினைவுபடுத்திக் கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.வினாவும் விடையும் ஓரிரு வரிகளில் கொடுத்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக வினா: உலகு ஆதி பகவனை முதலாக உடையது எது போல? விடை: எழுத்து எல்லாம் அகரத்தை முதலாக உடையது போல. எது செய்யாமல் செய்த உதவிக்கு நிகராகா? என்ற வினாவுக்கு வையகமும் வானகமும் நிகராகா என்பது விடை.இவ்வாறு திருக்குறள் கருத்தை புதிய கோணத்தில் படிப்பது மகிழ்ச்சியாகவும், பொழுது போக்காகவும் இருக்கிறது. அத்துடன் அறிவு வளர்ச்சியும் ஏற்படுகிறது. இதனைப் புலவர் தென்குமரனார் என்பவர் எழுதியுள்ளார். இந்நூலில் சுமார் 2000 வினாடி வினா விடைகள் உள்ளன. இந்த நூலின் விலை ரூ 20 மட்டுமே. உங்கள் ஊர் கடையிலும் கிடைக்கும், வாங்கிப் படி; இல்லையேல் எனக்கு எழுது, நான் வாங்கி அனுப்புகிறேன். மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம்
நன்றி
இப்படிக்கு,
உன் உயிர்த்தோழன்
அஅஅ.
உரைமேல் முகவரி:
பெறுநர்
ஆஆஆ,
முகவரி.
#SPJ3